தீபாவளி போனஸ் இழுத்தடிப்பு கொடநாடு எஸ்டேட்டில் தொழிலாளர்கள் போராட்டம்


கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரராக உள்ள கொடநாடு எஸ்டேட்டில் 200-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் இதுவரை போனஸ் வழங்காததால் கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள், எஸ்டேட் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். காலை முதல் மதியம் வரை போராட்டம் நீடித்தது. இந்நிலையில், எஸ்டேட் மேலாளர் வெளியூரில் உள்ளதால் இன்று (9ம் தேதி) பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!