விவாகரத்தான நிலையில் ஒரே தொகுதியில் முன்னாள் தம்பதி போட்டி: பாஜக – திரிணாமுல் சார்பில் களம் காண்கின்றனர்

கொல்கத்தா: எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு அமைத்து வேட்பாளர்களை திரிணாமுல் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தன்னிச்சையாக 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார்.

இதனால் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பங்குரா மாவட்டம் பிஷ்ணுபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுஜாதா மண்டல் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அவரது விவாகரத்து கணவர் சவுமித்ரா கான் போட்டியிடுகிறார். இந்த தம்பதி ஜோடி கடந்த 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்தது. திரிணாமுல் காங்கிரசில் இருந்த சவுமித்ரா கான், கடந்த 2019ல் பாஜகவில் சேர்ந்தார். அப்போது அவரது மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்