4 மாவட்டங்களில் ரூ.103 கோடியில் தரைகீழ் தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: 4 மாவட்டங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103.23 கோடியில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகள் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியகோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து 11 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.முக்கிய அறிப்புகள் பின்வருமாறு:

 முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், 7 மாவட்டங்களில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.71.86 கோடியில் மேற்கொள்ளப்படும்.

 7 மாவட்டங்களில் 10 இடங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பகிரணைகள் அமைக்கும் பணி ரூ.55.36 கோடியில் மேற்கொள்ளப்படும்.

 கடலூர் மற்றும் மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103.23 கோடியில் மேற்கொள்ளப்படும்.

 சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 7 குறு பாசன கண்மாய்களைப் புனரமைக்கும் பணி ரூ.4.97 கோடியில் மேற்கொள்ளப்படும்.

 காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் அணைக்கட்டுகளைப் புனரமைப்பு செய்யும் பணி ரூ.3.7 கோடியில் மேற்கொள்ளப்படும்.

 நவீன நில அளவை கருவிகளை கொண்டு எல்லைக் கற்கள் நடும் பணி ரூ.35 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

Related posts

பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது