5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் குறைந்த பட்சம் 65 மிமீ முதல் 115 மிமீ வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய மற்றும் வட மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும், மத்திய கிழக்கு, வட மேற்கு, தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்

1948-ல் மயிலாடுதுறையிலிருந்து லண்டன் எடுத்துச் செல்லப்பட்ட சிலை மீட்பு

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்