மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் பகுதியில் மாவட்ட அளவிலான 4ம் ஆண்டு சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு சிலம்பக் கமிட்டி மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பு கமிட்டி சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் நேற்று 4ம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண், பெண் சிலம்பப் போட்டி நடந்தது. இது, திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி செயலாளர் ரஜினி ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த சிலம்ப போட்டிக்கு திருவள்ளூர் மாவட்ட சிலம்பக் கமிட்டி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மேலும், போட்டி இயக்குனர்கள் சௌந்தர்யா, யோக பிரியா, திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர்கள் மணி, அருள் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 750 ஆண், பெண் சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் முகமது சிராஜ் அன்சாரி, செயலாளர் தியாகு நாகராஜ், தேசிய துணைத் தலைவர் எமராஜா, தேசிய தொழில்நுட்ப இயக்குனர் துரை, தேசிய மகளிர் அணி தலைவர் சங்கீதா போட்டிகளை துவக்கி கண்காணித்தனர்.

இதனை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். மேலும், இந்த போட்டியில் திமுக நிர்வாகிகள் ராமஜெயம், செல்வசேகரன், ரமேஷ் அறிவழகன், ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி ஜெயராமன், தொழிலதிபர்கள் வேல்முருகன், இளங்கோ பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர். முடிவில் திருவள்ளூர் மாவட்ட செல்வ கமிட்டி பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Related posts

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல்