வட்டார கல்வி அலுவலர் தெரிவு பட்டியல் வெளியிட்டது டிஆர்பி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வித்துறையில் கடந்த 2019-20 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 39 ஆயிரத்து 403 பேர் பங்கேற்றனர். நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 33 பேர் வட்டார கல்விஅலுவலர் பணிக்கு தகுதியுடையவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். அந்த தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மேற்கண்ட தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கான தெரிவை தெரிந்துகொள்ள இணைய தளத்தை பார்க்கலாம்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது