மூலிகை தோட்டத்தை மாவட்ட எஸ்பி., ஆய்வு

தர்மபுரி: பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் மூலிகை செடி தோட்டம் மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. வேப்பன், புங்கன், மூங்கில், புன்னைமரம், வில்வம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நடவு செய்து மாணவர்கள் வளர்த்து வருகின்றனர். இதையறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் அங்கு சென்று மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மூலிகை செடிகளை நட்டு பராமரித்து வரும் மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதில் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, இன்ஸ்பெக்டர் தவமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்