மாவட்ட பதிவாளருக்கு பத்திரம் ரத்து அதிகாரம் வழங்கும் அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலி பத்திரம் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால் அந்த பத்திரம் செல்லாது என அறிவிக்கும் அரசாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார் குறித்து பதிவாளர் விசாரித்து அது போலியானது என கண்டுபிடித்து ஆதாரம் இருந்தால் பத்திரம் ரத்து செய்ய அரசாணை உள்ள நிலையில், புதிய சட்டப்பிரிவுகளுக்கு எதிராக நித்யா பழனிச்சாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டப்பிரிவுகள் இரண்டும் சட்ட விரோதமானது; நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் விதமாக உள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்