தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட நான்கு பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கியஅமர்வு, “பாஜ அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேற்கண்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி வழக்கறிஞர் மேத்யூ நெடும்பறா உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,தலைமையிலான ஆகிய நான்கு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 2013ன் சட்ட விதிகளின்படி கடந்த பிப்ரவரி 15ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்தவித முரண்பாடுகளோ அல்லது பிழையோ கிடையாது. முன்னதாக நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்கு பின்னரே தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறு ஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி