கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பொது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பொது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கலாஷேத்ரா மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுபவித்து வரும் 1.46 ஏக்கர் நிலா பொதுப்பாதையை தங்களுக்கே ஒதுக்க நிலா நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்திருந்தார்.

நில நிர்வாக ஆணையர் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வதாக கலாஷேத்ரா வழக்கு தொடரப்பட்டிருந்தது. கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பொது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் உள்ள மத்திய கலாச்சாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா வழக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தின் வழியாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைந்திருந்தது. மேலும் மயானத்திற்கு வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு அப்பபகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நில ஒதுக்கீட்டை என் ரத்து செய்யக்கூடாது என கலாஷேத்ராக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நோட்டீஸை எதிர்த்த வழக்கில் வளாகத்தின் தென்மேற்கு பகுதியில் 1 ஏக்கர் நிலத்தை மயானம் அமைக்க ஒதுக்குப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தத்த்து. அதன்படி 1990ம் ஆண்டு ஒரு ஏக்கர் 16 சென்ட் இடம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது, அதன் பின்னர் கலாஷேத்ரா பயன்பாட்டில் இருந்து வந்த 1.46 ஏக்கர் நிலம் 2004ம் ஆண்டு வரை ஒரு கொடியே அறுபத்து ஆறு லட்சம் ரூபாய் வரை வாடகைக்கு வழங்கப்பட்டது. கல்வி நிறுவனம் என்பதால் இந்த பாதை நிலத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி கலாஷேத்ரா முன்வந்து ஏற்று நிலாநிருவாக ஆணையர் அந்த நிலத்தை கலாஷேத்ரா வழங்க கடந்த 2010ம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது.

அப்போதிருந்து, அறக்கட்டளை ஒரு கல்வி நிறுவனமாக இருந்ததால், பொதுப் பாதை நிலத்தை இலவசமாக வழங்குமாறு அரசாங்கத்திடம் பல முறைப்பாடுகளை தொடர்ந்து செய்து வந்தது. அதன் கோரிக்கையில் வலிமையைக் கண்டறிந்து, நில நிர்வாக ஆணையரும் ஜனவரி 29, 2010 அன்று தனது ஆதரவில் பரிந்துரை செய்தார்.

ஆனால், அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை. இதற்கிடையில், பாதையாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் பக்கா சாலை அமைப்பதற்காக, GCC அதிகாரிகளும் உள்ளூர் கவுன்சிலரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வளாகத்திற்குள் கட்டுமானப் பொருட்களைக் கொட்டத் தொடங்கினர். சிவில் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கியதாகவும் அவர்கள் கூறினர். எனவே, அந்த நிறுவனம் நீதிமன்றத்திற்கு விரைந்து சென்று, தற்போதைய நிலைக்கான உத்தரவைப் பெற்றுருந்தது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்