தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்துள்ளனர். தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வாரணாசியில் செந்தில் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கைது செய்தனர். 5 பேரும் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது