உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. அதில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செங்கல்பட்டு கலெக்டர் கூட்டரங்கில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்எல்ஏக்கள் பாலாஜி, பாபு ஆகியோர் முன்னிலையில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 348 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதனை தொடர்ந்து, வருவாய் துறையின் சார்பாக மதுராந்தகம் வட்டம், வையாவூர் குறுவட்டம், வேடவாக்கம் மதுரா நெய்குப்பி கிராமத்தில் 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் 5 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பாக வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம் 2022-23ன் கீழ் ரூ.6.63 லட்சம் மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய பவர் டில்லர்கள் வழங்கினார்.

மேலும், கூட்டுறவு சங்கத்தின் சார்பாக 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டில் வாகனங்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கடன், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் என 25 பயனாளிகளுக்கு ரூ.38.15 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து மதுராந்தகம் வட்டம், கிணார் கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த ஸ்ரீநாத் என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

பின்னர், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பாக செங்கல்பட்டு உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இயற்கை உரம் உற்பத்தி, நிலக்கடலை மற்றும் எள் கொள்முதல் செய்திட கூடுதல் கடன் பெறுவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிதி மானிய தொகையினையும், நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் தொடங்கிட 50 பயனாளிகளுக்கு ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், மகளிர் திட்ட இயக்குநர் மணி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பரத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாகிதா பர்வின், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசு, திருக்கழுக்குன்றம் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன்,
புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் ரவி, பல்லாவரம் பகுதி செயலாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சங்கீதா பாரதிராஜன், லத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி பாபு, நந்திவரம்கூடுவாஞ்சேரி ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பாக செங்கல்பட்டு உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இயற்கை உரம் உற்பத்தி, நிலக்கடலை மற்றும் எள் கொள்முதல் செய்திட கூடுதல் கடன் பெறுவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிதி மானிய தொகையினையும், நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் தொடங்கிட 50 பயனாளிகளுக்கு ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை