ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்: ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை காலதாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அரசு துறைகள்,பொதுதுறை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒன்றிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அவ்வப்போது இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், வழக்குகளை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வருவதில் அதிகளவு காலதாமதம் ஏற்படுகிறது.

இது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு எதிரானது. ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்குவதற்கான நோக்கத்தையே சிதைக்கிறது.இறுதி உத்தரவு வெளியிடுவதற்கு முன்னர் விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை முடிப்பதற்கான மாதிரி காலக்கெடு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆணையம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சி துறை வழங்கிய தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் பின்பற்றப்படுவதை தலைமை ஒழுங்குமுறை கண்காணிப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதே போல் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குகள் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா