ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


திருவள்ளூர்: ஆந்திர மாநிலஆரணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று 500 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்கள் அச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் கனமழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்த்தேக்கத்தின் முழுநீர் மட்ட அளவு 281 அடி. நேற்று மாலை 6 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட அளவு 275.10 அடியாக உள்ளது. தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் நீர்த்தேக்கத்திற்கு வரும் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால் நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரிநீரை அணையின் பாதுகாப்பு கருதி ஆந்திர மாநில அரசு இன்று 500 கனஅடி உபரிநீரை திறந்து விடப்பட உள்ளதால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்படுகிறது.

இந்நிலையில் வெளியேற்றும் வெள்ள நீரை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் தேக்கப்பட்டு ஏரிகளுக்கு வரத்துக் கால்வாய் மூலம் பாசனத்திற்காக நீர் சேகரித்து அனுப்பப்படுகிறது. நீர்த்தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும். எனவே, ஆரணியாற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரன்டூர், 43. பனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாக்குளம், பெரியபாளையம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், எலியம்பேடு, பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, இலட்சிமிபுரம், கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம்,

பிரளயம்பாக்கம், போலாட்சியம்மன்குளம், ஆனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம்,கல்பட்டு, மாளந்தூர், தொளவேடு, மேல்மாளிகைபட்டு, கீழ்மாளி கைபட்டு, பெரியபாளையம், ராளப்பாடி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம் வெள்ளோடை ஆலாடு, கொளத்தூர், குமாரசிரளப்பாக்கம், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிபாளையம், தத்தமஞ்சி, காட்டூர் கடப்பாக்கம் சிறுபழவேரற்காடு, ஆண்டார்மடம், தங்கல்பெரும்புலம், மற்றும் ஆரணியாற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளின் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்