மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குதல், 100 நாள் வேலை சட்ட விதிகளின் படி வேலை வழங்குதல், இலவச மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!!

கூட்டுறவு வங்கியில் ரூ.2 கோடி மோசடி: மேலாளர் கைது

சிபிஐ போல் நடித்து காங்.எம்.எல்.ஏ.விடம் ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி: கேரளாவில் பரபரப்பு