திண்டுக்கல்லில் ரூ.20 கோடியில் ‘தேவாங்கு’ பாதுகாப்பு மையம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.20 கோடியில் ‘தேவாங்கு’ பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:
முன்னதாக, அமைச்சர் பேசும்போது, வனத்துறை அறிவிப்பு புத்தகம் புலித்தோல் போன்ற அமைப்பில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், புலியின் படம் பொறித்தும் அறிவிப்புகள் அச்சிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
வனத்துறை அறிவிப்புகள்:

  • அரிய வகை தேவாங்கு இனம், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் வாழ்கின்றது.
    இவை கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளில் பரவியுள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள இந்த தேவாங்கு இனத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ஒன்று ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.
  • சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் தஞ்சாவூர் மனோராவில் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க பள்ளிக் கரணை பாதுகாப்பு மையம் ரூ.20 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் ஏரியில் சூழல் மறு சீரமைப்பு பணிகள், அந்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • கூத்தன்குளம் பறவைகள் சரணாலய வளர்ச்சிப் பணிகள் ரூ.6 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • பழவேற்காடு பறவைகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாத் திறனை மேம்படுத்தவும் வளர்ச்சி பணிகள் ரூ.3 கோடியே 70 செலவில் மேற்கொள்ளப்படும்.
  • அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு