திண்டுக்கல் மலர் சந்தையில் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்கள் விலை உயர்வு

திண்டுக்கல்: தொடர் முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை விலை கிலோவுக்கு ரூ.1000 வரை அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு சொந்தமான மலர் சந்தை செயல்பட்டு வருகிறது.

இந்த மலர் சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள அய்யலூர், வட மதுரை, சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பூக்களை திண்டுக்கல் மலர் சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். கடந்த வாரம் வரை ஆடி மாதம் மற்றும் முகூர்த்த நாட்கள் இன்மை காரணமாக பூக்களின் விலை கடுமையாக வீழ்த்தியடைந்து காணப்பட்டது.

தற்போது தொடர் முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.200க்கு விற்பனையான மல்லிகை பூ, ரூ.1,200க்கும், ரூ.130க்கு விற்பனையான முல்லை பூ விலை ரூ.600க்கும், ரூ.300க்கு விற்பனையான ஜாதிமல்லி பூ விலை ரூ.500க்கும், ரூ.800க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,200க்கும் விற்பனையாகிறது.

திண்டுக்கல் மலர் சந்தையில் இன்று மட்டும் 50 முதல் 70 டன் வரை பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூக்களின் விலை பெரிதளவில் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்