திண்டுக்கல் பெண் வீட்டில் விளைவிப்பு 3 அடி உயர வெள்ளரிக்காய்

திண்டுக்கல்: திண்டுக்கல் பெண் ஒருவர் வீட்டு தோட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் 3 அடி உயர வெள்ளரிக்காய் விளைவித்து அசத்தியுள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஷர்மிளா தினேஷ். இவர் தனது வீட்டில் பெரிய பூந்தோட்டம் அமைத்து தக்காளி, மிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளை பயிர் செய்து வருகிறார். இதற்கு காய்கறி, பழங்களின் கழிவுகள், மரங்களில் இருந்து விழக்கூடிய இலைகள், மாட்டு சாணம் ஆகியவற்றை கொண்டு இயற்கை உரம் தயார் செய்து பயன்படுத்துகிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து வாங்கி வந்த வெள்ளரிக்காய் விதையை வீட்டில் நட்டு வளர்த்துள்ளார். சாதாரணமாக வெள்ளரிக்காய் ஒரு அடி உயரம் தான் இருக்கும். ஆனால் ஷர்மிளா, வளர்த்து வரும் செடியில் 3 அடி உயரத்திற்கு வெள்ளரிக்காய் வளர்ந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது