திண்டுக்கல் மலைக்கோட்டை

திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் அபிராமி அம்மன் காளஹேஸ்வரர் கோயில் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரத்தில் மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்டது . 900 அடி (270 மீ) உயரம் மற்றும் 2.75 கிமீ (1.71 மைல்) சுற்றளவு கொண்ட இந்தக் கோட்டை 1605 ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னர் இது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கோட்டை பல சரித்திரங்களை உள்ளடக்கியுள்ளது.

1799ஆம் ஆண்டு பாலிகர் போர்களின்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. அதன் உச்சியில் கட்டுமானப்பணி பாதியில் கைவிடப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. திண்டுக்கல்லின் வரலாறு சிறிய பாறை மலை மற்றும் கோட்டையை மையமாகக் கொண்டது. திண்டுக்கல் பகுதி தென்னிந்தியாவின் மூன்று முக்கிய சாம்ராஜ்யங்களான சேரர், சோழர் மற்றும் பாண்டியர்களின் எல்லையாக இருந்தது.

1790 இல் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் மைசூர் இரண்டாம் போரில் திண்டுக்கல் மீது படையெடுத்து அவரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். 1792 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உடன்படிக்கையில் திப்பு கோட்டையுடன் திண்டுக்கல்லையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்தார். மதுரை மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்த முதல் மண்டலம் திண்டுக்கல். 1798இல் பிரிட்டிஷ் ராணுவம் பீரங்கிகளால் மலைக்கோட்டையைப் பலப்படுத்தியது. மேலும் ஒவ்வொரு மூலையிலும் காவலர் அறைகளைக் கட்டியது. 1798 முதல் 1859 வரை பிரிட்டிஷ் ராணுவம் திண்டுக்கல் கோட்டையில் தங்கியிருந்தது. அதன்பிறகு மதுரை ஆங்கிலேய ராணுவத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டு, திண்டுக்கல் ஒரு தாலுகாவாக இணைக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெறும் வரை திண்டுக்கல் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டில் கோட்டையில் பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூடு பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை இரட்டைச் சுவர்களால் ஆன அறைகள் அமைக்கப்பட்டன. கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களில் பீரங்கிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கட்டப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் நிறுவப்பட்டன. இரட்டைச் சுவர் அறைகள் வெளிப்புற அச்சுறுத்தலுக்கு எதிராக முழுமையாக பாதுகாக்கப்பட்டன. மேற்கூரையில் துளைகள் மூலம் நன்கு காற்றோட்டமாக இருந்தன. குடோனின் ஒரு மூலையில் உள்ள மெல்லிய செங்கல் சுவர் அவசரகாலத்தில் ராணுவவீரர்கள் தப்பிக்க உதவியது. கோட்டையில் 48 அறைகள் உள்ளன. அவை ஒரு காலத்தில் போர்க் கைதிகள் மற்றும் அடிமைகள் தங்குவதற்கு அறைகளாகப் பயன்படுத்தப்பட்டன. விசாலமான சமையலறை, ஒரு குதிரை லாயம் மற்றும் ராணுவத் தளபதிகளுக்கான சந்திப்பு மண்டபம் உள்ளது. தற்போது இந்தக் கோட்டை இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு ரசிப்பதோடு பல வரலாற்று தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான வரலாற்றுச் சின்னமாக உள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்