கும்மிடிப்பூண்டி அருகே துர்ககாளி திருக்கோயில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குருவிஅகரம் பகுதியில் துர்ககாளி திருக்கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த குருவிஅகரம் கிராமத்தில் துர்ககாளி அம்மன் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அன்று நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகமும் பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இங்கு, ஐயப்ப பக்தர் வருடம் தோறும் மாலையிட்டு வருவது வழக்கம். அதன்படி, மாலையிட்ட ஜயப்ப பக்தர்கள் 117 பேர் நேற்றுமுன்தினம் ஆலயத்தை வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர்.

இந்த தீமிதி திருவிழாவை காண 500க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் என கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், ரெட்டம்பேடு தலைவர்கள் சங்கர், முரளி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் முன் நின்று சிறப்பாக நடத்தினர். இதனை தொடர்ந்து, துர்ககாளிஅம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதியும் வானவேடிக்கையும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தீமிதி திருவிழாவில் தண்டலச்சேரி கிராம பெருந்தமைக்காரர் உள்ளிட்ட பொதுமக்கள் முன்னின்று நடத்தினர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கும்மிடிப்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு