பழுதடைந்த தொடக்கப்பள்ளிக் கட்டிடம்

ஊத்துக்கோட்டை: பழுதடைந்த தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் காக்கவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இக்கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 5 வகுப்பறைகள் உள்ளன. இந்த தளம் போட்ட கட்டிடத்தில் சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து மாணவர்கள் மீது விழுகிறது.

இதனால் மாணவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மேலும் பள்ளி கட்டிடத்தின் பின்புறம் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இந்த புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வகுப்பறைக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்திலேயே படிக்கின்றனர். எனவே பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளியின் பின்புறம் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படையின் ஏர் ஷோ சென்னை குலுங்கியது: 15 லட்சம் பேர் பரவசம்

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து