பதவி பிரமாணத்தின் போது அரசியலமைப்பின் கண்ணியத்தை குறைக்கும் விதமான வார்த்தைகள்: சபாநாயகர் கவலை

புதுடெல்லி: 18வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் கடந்த மாதம் 24ம் தேதி பதவியேற்றனர். அப்போது இந்தியா கூட்டணி எம்பிக்கள் அரசியலமைப்பை புகழும் வகையில் ஜெய் சம்விதான்,ஜெய் பீம் என கோஷங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது நாடாளுமன்ற மரபுகளின்படி உறுதி மொழி ஏற்க வேண்டும் என சபாநாயகர் கூறினார். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில்,‘‘ எம்பிக்கள் பதவி ஏற்கும் போது அரசியல் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்திலேயே தான் பேச வேண்டும். பதவி ஏற்கும் போதும் பதவி ஏற்ற பின்னரும் அரசியலமைப்பின் கண்ணியத்தை குறைக்கின்ற வகையிலான வார்த்தைகளை பேசக்கூடாது. இது கவலைக்குரிய விஷயம். இந்த விவகாரம் பற்றி விவாதித்து முடிவெடுப்பதற்கு அனைத்து கட்சிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்’’ என்றார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்