டிஜிட்டல் இந்தியா என தம்பட்டம் தரவுகளை பாதுகாக்க முடியாத ஒன்றிய அரசு: காங். கடும் கண்டனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் ஆதார் எண், போன் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தகவல்கள் டெலிகிராம் பாட் மூலம் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஒன்றிய பாஜ அரசு மக்களின் தனியுரிமை பற்றியோ, தேச பாதுகாப்பு பற்றியோ கவலைப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

டிஜிட்டல் இந்தியா என தம்பட்டம் அடிக்கும் பாஜ ஆட்சியில் சைபர் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன’’ என்றார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், ‘‘கோவின் தரவு கசிவு விவகாரத்தில் உண்மையை அரசு சொல்ல வேண்டும்’’ என்றார்.

Related posts

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து

நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து