டிஜிட்டல் அடையாள திட்டம் இலங்கைக்கு இந்தியா ₹45கோடி நிதி

கொழும்பு: இலங்கையில் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக ரூ.45 கோடி(450மில்லியன்) நிதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. டிஜிட்டல் தேசிய அடையாள திட்டத்தை இலங்கை இந்தியாவின் மானிய உதவியுடன் செயல்படுத்தவுள்ளது.

இதற்காக கடந்த 2022ம் ஆண்டு மார்ச்சில் இலங்கை-இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கை டிஜிட்டல் அடையாள திட்டத்திற்காக இந்திய இலங்கை கூட்டு திட்ட கண்காணிப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மென்பொருள் மேம்பாட்டை இந்திய அரசு கவனித்து வருகின்றது.

இந்நிலையில் டிஜிட்டல் அடையாள திட்டத்திற்காக இந்தியா ரூ.45கோடி நிதியை இலங்கையிடம் நேற்று முன்தினம் வழங்கியது. இது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘டிஜிட்டல் அடையாள திட்டத்திற்காக இந்திய அரசின் அர்ப்பணிப்பை குறிக்கும் வகையில் இந்திய தூதர் ரூ.45 கோடிக்கான காசோலையை தொழில்நுட்ப துறை அமைச்சர் கனகஹேரத்திடம் ஒப்படைத்தார். இது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான மொத்த பணத்தில் ரூ.15சதவீதமாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி