குப்பையில் கிடந்த 5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்; தூய்மைப் பணியாளருக்கு குவியும் பாராட்டு!

சென்னை: குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து பாராட்டி, ஊக்கத்தொகையை மேயர் பிரியா வழங்கினார். குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் அந்தோணிசாமிக்கு, சென்னை மேயர் பிரியா ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தேவராஜ் என்பவர், நேற்று தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பைகளுடன் சேர்த்து மாநகராட்சி குப்பை வண்டியில் கொட்டியுள்ளார்.

பின்னர், வீட்டில் நகையை தேடியபோது, குப்பையுடன் சேர்த்து கொட்டப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ், உடனடியாக மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் உர்பேசர் தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு உதவி கோரினார். அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் ஓட்டுனரான அந்தோணிசாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தீவிர சோதனை நடத்தி, குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லஸை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பான செய்திகள் மற்றும் வீடியோ சமூகவலைதலங்களில் வைரலானது.

அத்துடன் தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குப்பை வாகன ஓட்டுநர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உர்பேசர் நிறுவன மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், திட்ட மேற்பார்வையாளர் குருசாமி, சட்டக்குழுத் தலைவர் சூரிய பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை