தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: முன்னாள் நேர்முக உதவியாளர் கைது

நாகப்பட்டினம்: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டார். தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டியதாக மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம். செந்தில் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவாகியது. வழக்கில் மார்ச் 15-ம் தேதி கைதான அகோரம் நேற்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில் வாரணாசியில் செந்திலை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related posts

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!