பூந்தண்டலம் – பென்னலூர் இடையே ரூ.1.15 கோடி மதிப்பில் தார்சாலை பணி: எம்எல்ஏ, எம்பி தொடங்கி வைத்தனர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பூந்தண்டலம் – பென்னலூர் கிராமம் இடையே ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உத்திரமேரூர் அருகே பூந்தண்டலம் முதல் பென்னலூர் கிராமம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் இச்சாலையில் செல்வதற்கு கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.இந்நிலையில், இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சேதமடைந்த இச்சாலையினை அகற்றிவிட்டு, புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, முதலமைச்சரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், பொதுக்குழு உறுப்பினர் பொன்.சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய தார்சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தனர். இதில், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்