தருமபுரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 3 லாரிகள், 2 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது தான் இந்த பயங்கர தீ விபத்து நடந்து முடிந்திருக்கிறது. உடல் கருகிய நிலையில் மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகள் இன்னும் அதிகிரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. நடந்த முடிந்த விபத்தால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் நோக்கி வேகமாக சென்ற சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்ற லாரிகள், கார்கள் மீது நொடிப்பொழுதில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்து நடந்தவுடனே லாரி மற்றும் கார்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியிலிருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. விபத்து நடந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும், விபத்து குறித்தும் தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு