ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தருமபுரியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சேலம் : . ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடைபெற்ற விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் மிக எளிதாகப் பெற முடியும் என்பதை அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ரூ.445 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரூ.56 கோடி மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கென 20 பிரத்யேக பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு