தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

சென்னை: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் கிராமத்தில் நேற்று மாலை 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள் பலத்த காயமடைந்ததோடு இவ்விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

Related posts

பாலியல் குற்றவாளிகளின் வழக்கை 15 நாட்களில் விசாரித்து தீர்ப்பு: மோடிக்கு மம்தா பானர்ஜி அவசர கடிதம்

மின்வாரிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற தடைஉத்தரவை காண்பித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் விட்டு சென்ற அதிகாரிகள்