தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவர் குருபூஜை விழாவில் அவருக்கு சாத்துவதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 14 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இந்த கவசத்தை நிர்வகிக்கும் பொறுப்பானது அதிமுகவின் பொருளாளருக்கும், தேவர் திருக்கோயிலின் நிர்வாகி காந்தி மீனாள் அம்மையாரிடமும் கொடுக்கப்பட்டது.

மதுரையில் உள்ள ஒரு வங்கி கிளையின் பெட்டகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் இந்தக்கவசம் ஆண்டுதோறும் தேவர் குருபூஜை விழாவின் போது வெளியே எடுக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டு பின்னர் மீண்டும் வங்கியில் பாதுகாக்கப்படும். இந்நிலையில் தேவர் தங்க கவசத்தை மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் இடம் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு்ள்ளது. அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு

மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி