தேவாலா மாமுன்டி காலனியில் 40 ஆண்டுக்கு பின் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா மாமுண்டி காலனியல் 40 ஆண்டுக்கு பின் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் 13வது வார்ட்டு மாமுண்டி காலனி மற்றும் அரசு தேயிலைத்தோட்டம் டேன் டீ சரகம் 4 பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் மிகவும் சிறமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் அந்த பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு தெரு விளக்குகள் பொறுத்தப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகர் மன்ற துணை தலைவர் நாகராசு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் புவனேஷ்வரி செல்வராஜ் வரவேற்று பேசினார்.

நிகழ்வில் திமுக வார்டு செயலாளர் தில்லை நாதன், முன்னாள் செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ஹரிதாஸ், விஜயரத்தினம், ஜெயராமன், கணேசன், பொன்னுதுரை, மயில் வாகனன், முருகா, ஜீவா, சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 40 ஆண்டுக்கு பின் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு

ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து

திருமண உதவித் திட்டங்களுக்காக தங்கம் கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு