தொடர் விடுமுறை காரணமாக பழநி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பழநி: தொடர் விடுமுறை காரணமாக பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருநாள் மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படையான பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகளவு இருந்தது. இதன் காரணமாக பழநி அடிவாரத்தில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் ஹவுஸ் புல்லானது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். பக்தர்கள் வந்த வாகனங்கள் அடிவார பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக தீர்த்தக்காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் குற்ற செயல்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்