12 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. இதனால் தரிசனத்திற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் கோயிலில் நேற்று 79,398 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 43,557 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹2.90 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இன்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 22 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்