சதுரகிரியில் வெள்ளம் 200 பக்தர்கள் சிக்கினர்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். இதனிடையே சதுரகிரி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது.

திடீரென கொட்டிய கனமழையால், மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டது. இதனால் மலைக்கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட பக்தர்களை கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து அறிவுறுத்தினர். வனத்துறை அறிவிப்புக்கு முன்பாக கீழே இறங்க தொடங்கிய பக்தர்களின் பாதுகாப்புக்காக ஓடை பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை