திருபுவனம் கும்பகேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ரவி வருகையால் பக்தர்கள் அவதி

கும்பகோணம்: திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையால் பக்த்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஆளுநர் வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் தரிசனத்துக்கு தாமதமாவதற்காக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோயில் குடமுழுக்கையொட்டி அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருக்கும் நிலையில் தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ரவி வருகையால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரவி வருகையால் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோயிலில் இருந்து ஆளுநர் ரவி வெளியே வந்த பிறகுதான் பக்தர்கள் உள்ளே அனுமதிப்போம் என்றதால் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்