சுருட்டபள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலுக்கு ரூ.1.90 லட்சத்தில் வெள்ளி கிரீடம் வழங்கிய பக்தர்

ஊத்துக்கோட்டை: சுருட்டபள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலுக்கு, ரூ.1.90 லட்சம் செலவில் வெள்ளி கிரீடம், காதணிகளை சேலம், செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த பக்தர் வழங்கினார். ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் ஸ்ரீ சர்வ மங்களா சமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சர்வமங்களா தேவி மடியில், பள்ளிகொண்ட நிலையில் காணப்படும். ஆகவே, சர்வமங்களா தேவிக்கு, வெள்ளி கிரீடம் மற்றும் கம்மல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், கோயில் சேர்மன் முனிசந்திரசேகர் தலைமையில், செயல் அலுவலர் ராமச்சந்திரா ரெட்டி முன்னிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த சேலம், செவ்வாப்பேட்டை பகுதியில் வசிக்கும் நந்தகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர், ஸ்ரீ சர்வமங்களா தேவிக்கு, ரூ.1.90 லட்சம் மதிப்புள்ள 2,427 கிராம் எடைகொண்ட வெள்ளி கிரீடம் மற்றும் காதணிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கோயில் உறுப்பினர்கள் முனிவேலு, மஞ்சுளா உமாபதி, கோயில் அர்ச்சகர் கார்த்திகேசன் மற்றும் சிப்பந்திகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!