பக்தர்களின் வசதிக்காக திருப்பதி கோயில் பகுதியில் 3வது உணவு கவுன்டர் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் வசதிக்காக 3வது உணவு கவுன்டர் திறக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் குளக்கரை அருகே மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இவை தவிர ராம்பகிஜா பஸ் நிலையம் மற்றும் யாத்திரிகள் சமுதாயக்கூடம் அலுவலகம் ஆகிய இடங்களிலும் உணவு கவுன்டர்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், திருமலையில் பக்தர்களின் வசதிக்காக அன்னபிரசாத துறையின் கீழ் யாத்திரிகள் சமுதாயக்கூடத்தில் மேலும் ஒரு உணவு கவுன்டர் அமைக்கப்பட்டு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:
இங்கு காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் அன்னபிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த உணவு கவுன்டர் யாத்திரிகள் சமுதாயக்கூடத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் மொத்த உணவு கவுன்டர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

12 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 74,873 பக்தர்கள் தரிசனம் ெசய்தனர். 27,997 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.34 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் ெசய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!