வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது: அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

வாஷிங்டன்: வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர்; உயர்ந்த மனித வாழ்வியல் நிறைய கொண்ட அமெரிக்கா என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது தமிழ்நாடு.

செமி-கண்டக்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் உங்களின் முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது. தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு; இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2ஆவது மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவு எழுச்சி கண்டுள்ளது. நவீன உட்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன.

புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் 20% தமிழ்நாட்டில் உள்ளன. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர். இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுக்கவே அமெரிக்கா வந்துள்ளேன் என்று கூறினார்.

Related posts

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி