திருமழிசை பேரூராட்சியில் ரூ.3.19 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி: கூட்டத்தில் தீர்மானம்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி கூட்டத்தில் ரூ.3.19 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாதேவன், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், விஜயலட்சுமி, கஸ்தூரி, ஜீவா, அனிதா, மஞ்சுளா, ராஜேஷ், பிரியா, வேணுகோபால், ரமேஷ், ஜெயசுதா, பிரதீப், வேலு, லதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், முதலில் மன்ற பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் எரிவாயு தகனமேடை அமைக்கவும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் எல்டிஎம் நகர் முதல் பூங்காவில் அபிவிருத்தி செய்யவும், பட்டேல் தெரு, காந்தி தெரு மேற்கு பகுதியில் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கவும், காந்தி குறுக்கு தெருவில் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டிலும், ஜவகர் தேரு குறுக்கு தெருவில் ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும், குண்டுமேடு பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்காகவும் மொத்தம் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்