அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரிக்கு புதிய வலைத்தளம் உருவாக்கம்

சென்னை: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரிக்கு காகிதத்தில் நிரப்பப்பட்டு வந்த படிவங்களை இணைய வழிக்கு மாற்றியமைக்கும் வகையில் புதிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக aasc.tn.gov.in என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த வலைத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட உள்ள பயிற்சி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். பயிற்சி பெறுவோரின் பட்டியலை தயாரித்தல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடல், பயிற்சியாளர்களின் பின்னூட்டம் பெறுதல், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை அளித்தல் என்று இதுவரை காகிதங்களில் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்தும் இனி இணைய வழியில் செயல்படுத்தப்படும்.

இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுவதுடன் அனைத்து விவரங்களும் எப்போதும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் இணையதளத்தில் பாதுகாப்பாக இருக்கும். மேலும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி குறித்த அனைத்து விவரங்களும் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும். அளிக்கப்படும் பயிற்சிகளின் வகைகள், ஆண்டு முழுவதும் பயிற்சிகள் நடைபெறும் நாட்கள், வகுப்பறைகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், தங்கும் விடுதிகள், கூட்ட அரங்கம், நூலகம், மண்டலப் பயிற்சி மையங்கள் போன்ற அனைத்துச் செய்திகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!