தேவர்சோலை பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கூடலூர் : நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ் அந்தோணியார் துவக்கப்பள்ளி வளாகம் மற்றும் பார்வுட் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சியின் செயல் அலுவலர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தேவாலய பாதிரியார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியின் அனைத்து நிலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தேவர் சோலை பேரூராட்சி தலைவர் செல்வி வள்ளி, துணைத்தலைவர் யூனுஸ் பாபு, செயல் அலுவலர் பிரதீப் குமார், இளநிலை பொறியாளர் கணேஷ், மன்ற உறுப்பினர்கள் மாதேவ், நாசர், மூர்த்தி, அனிபா, கிரிஜா, சாய்னா மற்றும் அலுவலக பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு புதிய மரங்களை நடவு செய்தனர். இதற்கு தேவையான மரக்கன்றுகள் அனைத்தும் தேவாலா தோட்டக்கலைத்துறை பண்ணையில் இருந்து பெறப்பட்டது.

Related posts

சாம்சங் போராட்டம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை: சி.ஐ.டி.யு. சௌந்திரராஜன்

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவு ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ்