முறையான அறிவிப்பு இல்லாததால் வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா

சென்னை:முன்கூட்டியே முறையானஅறிவிப்பு இல்லாததால் வார விடுமுறை தினத்தில் திறந்து வைத்தும் வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்களின் வருகை அதிகரித்தது. இதனால், வார விடுமுறையான செவ்வாய்கிழமையான நேற்று வழக்கம்போல் பூங்கா திறந்திருக்கும் என்று நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அறிவிப்பை பூங்கா நிர்வாகம் முன்கூட்டியே அறிவிக்காததால், செவ்வாய்க்கிழமையான நேற்று பூங்கா விடுமுறை என்று நினைத்து பார்வையாளர்கள் வரவில்லை. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

Related posts

யு.பி.ஐ டிக்கெட் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார்

வழக்கறிஞர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் புதிய ஷரத்துகளை சேர்த்துள்ளதால் குற்றவியல் சட்டங்களில் குழப்பங்கள்: பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து