ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது… நவம்பர் 18ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கிறது!!

டெல்லி :மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியது.இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது விசாகப்பட்டினத்திற்கு 380 கிமீ கிழக்கு – தென் கிழக்கிலும் ஒடிசாவில் பாராதீப்பிற்கு 380 கிமீ தெற்கிலும் மையம் கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் டிக்காவிற்கு 530 கிமீ தெற்கு – தென்மேற்கிலும் வங்கதேசத்தின் கேபுபராவிற்கு 670 கிமீ தென்மேற்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.இது மேலும் வலுப்பெற்று நவம்பர் 18ம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா – கேபுபரா இடையே கரையை கடக்கும்.கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதனிடையே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மாண்டலம் உருவாகியுள்ளதால் எண்ணூர், தூத்துக்குடி , நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி