தேர்தல் பணிக்காக துணை ராணுவம் அனுப்பும் பணி இன்று தொடங்குகிறது

புதுடெல்லி: தேர்தல் பணிக்காக பல்வேறு மாநிலங்களுக்கு துணை ராணுவத்தை அனுப்பும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அதோடு சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது.  இத்தேர்தலை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் பாதுகாப்பு பணியில் பல்வேறு படைப்பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 3.4 லட்சம் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக சுமார் 2000 கம்பெனியை சேர்ந்த 1.5 லட்சம் பேர் சாலை மற்றும் ரயில் மார்க்கமாக இன்று முதல் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களில் இன்று முதல் மத்திய படையினர் தேர்தல் பணிக்காக வர உள்ளனர். 2ம் கட்டமாக வீரர்கள் அனுப்பும் பணி வரும் 7ம் தேதி தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து கடைசி கட்டமாக மார்ச் 2 அல்லது 3வது வாரம் வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு