தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும் நியமனம் செய்ய 1581 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 6428 ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் துரை தலைவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் கடந்த 9.2.2024ல் நடைபெற்ற கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாகவுள்ள 5146 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைத்திடவும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாக உள்ள 3549 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்தும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்திடவும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!