அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் உயர் அலுவலர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய அறிவிப்புகள் குறித்தும், கோயில்களின் திருவிழாக்களின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

குடமுழுக்கு, தேர்த் திருவிழா, தீர்த்தவாரி விழாக்களின் போது எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடித்தல், இப்பணிகள் தொடர்பாக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளுதல், தீ விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல், கோயில்களின் கருவறை, பிரகாரங்கள், மடப்பள்ளி, நந்தவனங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மையை பேணுதல், கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன் காக்கும் வகையில் கோயில்களில் தேங்காய் நார் தரைவிரிப்புகள், பிரகார நடைபாதைகளில் குளிரூட்டும் வெள்ளை வண்ணப் பூச்சு பூசுதல் மற்றும் பந்தல்கள் அமைத்தல், பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், மோர், பானகம் போன்றவற்றை தடையில்லாமல் வழங்குதல் ஆகியவை குறித்தும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு