ஊடக துறையில் கை ஓங்குகிறது; ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகள் வாங்கிய அதானி

புதுடெல்லி: கடந்த 1988ம் ஆண்டு சரக்கு வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி, தற்போது 13 துறைமுகங்கள், 8 விமான நிலையங்களை கைப்பற்றி நாட்டின் நம்பர்-2 பணக்காரராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச்சில் அதானி குழுமம், வர்த்தகம் மற்றும் நிதி செய்திகளை வெளியிடும் டிஜிட்டல் மீடியா தளமான பிக்யூ பிரைம் சேனலை நடத்திய குயின்டில்லியன் பிசினஸ் மீடியா நிறுவனத்தை வாங்கி, ஊடக துறையில் களமிறங்கியது.

அதைத் தொடர்ந்து டிசம்பரில் என்டிடிவி சேனலின் 65 சதவீத பங்குகளை கைப்பற்றியது. தற்போது அடுத்ததாக ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் 50.5 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. அதானி குழுமம் கைப்பற்றி உள்ள 3வது மீடியா நிறுவமான ஐஏஎன்எஸ், கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.11.86 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்