தொடக்க கல்வித்துறையில் ஒரே மாதத்தில் 17,810 பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகளின் கீழ் கடந்த மாதம் மட்டும் தொடக்க கல்வித் துறையில் 17,810 பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் தொகுதிவாரியாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது தொகுதிவாரியாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை ஆய்வு அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். கடந்த மாதத்தில் மட்டும் 17,810 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆய்வுகள் நடைபெற்று உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு