டென்மார்க் நாட்டில் 7ம் ஆண்டாக ஒளி திருவிழா கோலாகலம்: இளம் ஜோடிகளுக்கு திருமண இடமாக மாறியதற்கு வரவேற்பு

டென்மார்க்: டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் ஒளித் திருவிழா அந்நாட்டை சேர்ந்த பல இளம்ஜோடிகளின் திருமண இடமாக மாறியுள்ளது. அந்த திருவிழாவிற்கு வரும் பலர் இந்த சுவாரசியத்தை பார்த்து ரசித்து செல்கின்றனர். திருமணம் நடைபெறுகின்றன நாள் மணமக்கள் அணிகின்ற உடை போன்று திருமணம் நடக்கும் இடமும் கூட அந்த நாள்களை இன்னும் சிறப்பாக்கி விடுகிறது. அது போன்ற ஒரு இடத்தை செய்ய காத்திருந்த டென்மார்க் ஜோடிகளுக்கு பரிசாக அமைந்துள்ளது நடப்பாண்டு ஒளித்திருவிழா.

அந்த நாட்டின் கோபன்ஹெகன் நகரில் 7வது ஆண்டாக ஒளித்திருவிழா தொடக்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தொடங்கும் இந்த திருவிழாவை காண அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமானோர் குவிகின்றனர். மின்விளக்குகளை கொண்டு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 50க்கு மேற்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வியக்கவைக்கும் வகையில் அமைத்துள்ளன.

அந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக அமைக்கப்பட்டுள்ள பிக்சல் எர்த் என்று பெயரிடப்பட்டுள்ள வடிவம் இளம் ஜோடிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 15க்கும் மேற்பட்ட ஜோடிகள் அங்கு திருமணம் செய்துகொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த வடிவத்தை உருவாக்கியவரின் திருமணமும் அங்கேயே நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒளித்திருவிழாவிற்கு அந்த நாட்டு மக்களின் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எல.ஈ.டி விளக்குகளால் கனவுலகத்தை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுக்கு ங்கு வரும் பார்வையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை